FEBRUARY 31st – Short Story
Spread the love
எழுத்து : சசிவன்

FEBRUARY 31ST

"மச்சி கௌதம் டேய் எந்திரிடா 9மணிக்கு train இருக்குடா. நீ என்ன 8 மணி மட்டும் தூங்குற எந்திரி டா". "என்னது 8மணியா!!" ஒரு பதற்றத்துடன் எழுந்தேன். "April fool April fool" என சுத்தி நிண்டு கத்துனானுகள். காதை பொத்தியவாறே calender ஐ பார்த்தன் April1st..."என்ன மச்சி ஏமாந்துட்டியா போடா போய் குளிடா" எண்டு ஹரி சொல்ல "போய் பல்லு தீட்டுடா" என brush அ தூக்கி தந்தான் சீனு...
"அதுக்கு முதல் அந்த letterboxஐயும் பாருடா... ஏதாவது letter வந்திருக்காணு..." என்றான் ஹரி. இவனுகள் வேற யாருமில்ல. என்னோட உயிர் நண்பர்கள்தான். நாங்க எல்லாரும் Engineering students.. Peradeniya campus தான்
பயங்கரவாத time என்றதால Hostel கொஞ்சம் safe இல்ல அதால நாங்க 3பேரும் ஒரு வீடெடுத்து boardingல தான் இருக்கம். இப்ப April semester leave என்றதால நாங்க எங்க ஊருக்கு கிளம்புறம். 9மணிக்கு தான் train.... இப்டியே யோசிச்சுட்டு வாசலுக்கு brushஓட வந்தன்.
"எப்டியும் letterboxல ஒண்ணும் இருக்கப்போறல...நமக்கு எதுக்கு வம்பு. பாத்திடுவமே" என ஒரு சோர்வோட boxஅ துறந்தன். அதிசயம்..... அங்க ஒரு காகிதம். என்ன இது எண்டவாறு யோசிச்சுட்டே அத எடுத்தன். உடனே ஹரியும் சீனுவும் அத பறிச்செடுத்து விரிச்சு பார்த்தானுகள்.. அது ஒரு letter அதுல, "Dear Gowtham, நான் ரம்யா. நான் உங்ககிட்ட முக்கியமான விசயம் ஒன்னு பேசனும். So tmrw 8க்கு Gardenக்கு முன்னால வாங்க" இத வாசிச்சதும் எனக்கு ஒரே shock "இது எப்டி... ரம்யா எனக்கெப்படி??" மனசுக்குள்ள கேள்விக்கணைகள்.. உடனே ஹரி, "மச்சி இது fake letterடா. Letter எழுதுன date அ பாரு. February 31st."
ஆமா அந்த letterல Date-2002.02.31 எண்டுதான் இருந்திச்சு "நாங்க உன்ன Aprilfool ஆக்குன மாதிரி யாரோ நம்ம பையனுகள்தான் ரம்யாட பேர வச்சி விளையாடுறானுகள். யாரோ நம்மள வச்சு செய்றானுகள்" என்றான் சீனு. எப்டியிருந்தாலும் "எதுக்காக ஒருத்தனோட feelingsல விளையாடனும். விளையாடுறதுக்கு வேற ஒண்ணும் கிடைக்கலயா??" ஒரே குழப்பம் எனக்கு... "இவனுகள்ட விளையாட்டு தானோ இல்ல... இல்ல.... உண்மையாவே ரம்யா தான் எழுதிருப்பாளோ..."
"ரம்யா.... வேற யாரும் இல்லங்க. நான் 2 வருஷமா love பண்ற பொண்ணுதான். Sorry பொண்ணு இல்ல அவ ஒரு தேவதை... One side தான். ரொம்ப நல்ல பொண்ணு அவ. குனிஞ்ச தலை கூட நிமிராத பதுமை அவள். அழகி... இப்டி அவள பத்தி வர்ணிச்சுக்கிட்டே போகலாம். என்ன அவ தான் என்ன திரும்பி கூட பாக்குறதில்ல. அது மட்டும் தான் ஒரேயொரு கவலை எனக்கு... ஆனா..... இந்த letter உண்மையா இருக்குமோ??" ஒரே குழப்பம் மனசுல.. "இன்னைக்கு மட்டும் ரொம்ப அதிகமா யோசிக்கிறனோ?" "டேய் அத பத்தியே யோசிச்சிட்டே இருக்காம போய் குளிடா. Already 7.30 ஆகிட்டுது. என்ன trainஅ மிஸ் பண்ண போறியா??"என்டு திட்டிக்கிட்டே சீனு bathroomக்குள் போனான்.யோசனையை விட்டுட்டு trainக்கு ready ஆகினன்.
நேரம் 8.20...... அவளோட நினைப்புத்தான் கண்ணுக்குள்ள....
Parkக்கு போ எண்டு மனசு சொல்லிச்சு. வேணாம் எண்டு உடம்பு தடுத்திச்சு... நேரம் 8.30.... எண்ணங்களின் அலைமோதல்களுக்கு மத்தியில போவம் எண்டு ஒரு முடிவெடுத்தன்... இவனுகள்ட சொன்னா திட்டுவானுகள் என்றொரு தயக்கம். இருந்தாலும் பரவால்லை தைரியமா சொல்லிட்டே போவம் என உள்மனசு சொல்லிச்சு.
"மச்சிஸ்... எனக்கு மனசு கேக்கலடா. போய் பார்த்துட்டு வாரன்டா" "சொன்னா கேக்கமாட்ட... சரி உன் இஷ்டம் என்னமோ பண்ணித்தொல ஆனா பாத்துட்டு 8.45க்குள்ள வந்திடனும்" என கோபத்தோட ஹரி சொன்னான். வீட்டுக்கு பக்கத்துல தான் Park என்றதால பாத்துட்டு வந்திரலாம் என்றொரு நம்பிக்கை... Parkக்கு வேகமா ஓடிப் போனன்.
Parkல கொஞ்ச Seniors தான் நிண்ணாங்க. அப்டியே Park முழுக்க தேடினன். அவள் இல்ல. So அது fake letter தான் எண்டு தோணுச்சு. ஒரு பக்கம் கவலை... ஒரு பக்கம் கோபம்... நமக்கு மட்டும் ஏன் இப்டி எல்லாம் நடக்குது எண்டு ஒரு ஆதங்கம்....
அப்பிடியே கவலையோட நடந்து போகக்குள்ள கண்முன்னாடி ஒரு பெரிய கூட்டம்....  "ஏதோ ஒண்ண சுத்தி நிண்ணு பாக்குறாங்க but என்ன எண்டுதான் புரியல..." கிட்ட நடந்து போனன். அது ஒரு accident case போல. கூட்டத்துக்கு இடையில போகவே வழி இல்ல. அப்பிடி சனம் சுத்தி நிக்குது.
ஒரு ஆள புடிச்சி "என்ன ஐயா நடந்தது?" எண்டு கேட்டன். "யாரோ ஒரு பொண்ணுபா. ஒரு லொறி காரன் அடிச்சுட்டு போய்ட்டான். Spot out.. ரொம்ப பாவம். எப்டியும் ஒரு 20-25 வயசு இருக்கும். சாகுற வயசா இது?" எண்டு கவலைப்பட்டு கதைச்சிட்டு போனார். "இந்த பொண்ணு ரொம்ப நேரம் இங்க wait பண்ணிட்டு நிண்டத பார்த்தனான். அப்டியே நடந்து வரக்குள்ள வந்த லாறிகாரன் அடிச்சிட்டு ஓடிட்டான்" என இன்னும் 2பேர் பேசிக்கிட்டு இருந்தனர். எனக்கு ஏதோ ஒண்ணு மனசில படுது ஆனா சொல்ல முடியல. இது கண்டிப்பா அவளா தான் இருக்கும் என உள் மனம் துடிக்கிது. என்னோட heartbeat எப்பவுமில்லாத மாதிரி அதிகமா இருக்குது என்றத என்னால உணரமுடியுது. "நீ எப்பிடி சடலத்தை பார்க்காம அது அவள் தானெண்டு முடிவெடுப்பா?" என மனசுக்குள்ள ஒரு கேள்வி. யாரெண்டு பாத்திடுவமெண்டு அந்த சனத்துக்குள்ள புகுந்து உள்ள போனன்.
 
அங்க.... அங்க..... அது என்னோட... என்னோட ரம்யா தான் ஆனா.. ஆனா அவள் வேறமாதிரி... லாறிட tyre முகத்தில ஏறி இருக்கும்னு நினைக்கன். முகம் சிதைஞ்சு போய்... அதுல மூளை வெளிய பிதுங்குன மாதிரி... road பூரா ரத்தம்.... பாக்கவே முடியாம கூட்டத்தை விட்டு வெளிய வந்துட்டன். ஒரே வாந்தி... தல சுத்த அப்டியே மயங்கி கீழ விழுந்துட்டன்.
அப்டியே மெதுவா கண் முழிச்சிப்பாத்தன். என்ன சுத்தி ஹரியும் சீனுவும் நிக்குறது கண்ல தெரியுது. டாக்டர் கிட்ட வந்து you are perfectly alright எண்டு சொல்லிட்டுப்போனார். என் கிட்ட வந்த ஹரி "கவலப்படாதடா" என என் தலையை தடவினான்.சுத்தி நடக்குற எல்லாத்தயும் உணரமுடியுது ஆனா என் மனசு அந்த இடத்துல இல்ல என்றது தான் உண்ம.
"உங்க நிலம எனக்குப்புரியுது" என ஒரு பெண்குரல். தலையை திருப்பி பார்த்தன். அது கவிதா..... அவளோட friend, infact close friend. "ஆனா நீங்க ஏன் Parkக்கு போகல Gowtham?? அவ உங்களுக்காக அங்க எவ்வளவு நேரம் wait பண்ணிட்டிருந்தா தெரியுமா?" கவலை கலந்த கோபத்துடன் கவிதா கேட்டாள்."நான் அந்த letterஅ சீரியஸாவே எடுக்கல. இன்னக்கு April1st எண்றதால அது ஒருவேள பொய்யா இருக்குமோ எண்டு நினச்சன்".
"ஐயோ அவ நேற்றுத்தான் இந்த letterஅ எழுதினா.அவக்கு உங்கள ரொம்ப புடிக்கும் தெரியுமா? daily நீங்க அவள பார்க்குறதால problem இல்ல. ஆனா இப்ப லீவு விடப்போறதால கொஞ்ச நாளக்கு பார்க்க முடியாம போயிருமோ என்ற பயம் தான் அவளுக்கு... அவரோட கதக்கனும் எண்டெல்லாம் ஆசயா இருக்குடி எண்டெல்லாம் சொன்னா. நேர்ல கதக்க தைரியம் இல்ல எண்டாலும் அவர் ஊருக்கு போக முதல் ஒருவாட்டி கதச்சு என் லவ் அ சொல்லிடனும்டி எண்டு ஒரு letterஅ அவசரமா எழுதி உங்கள கதக்க வர சொன்னா. அதான் நான் அந்த letterஅ உங்க letterboxல போட்டன்."
"அவ நேட்டுத்தான் letter எழுதின எண்டா எதுக்கு February 31st எண்டு date போடனும். நேற்று March 31stதானே???"
"இப்பதான் எனக்கு எல்லாம் புரிய தொடங்குது. அது fake letter இல்ல. அவ அவசரத்துல letter எழுதியிருக்கா. எழுதும்போது monthக்கு 3 எண்றதுக்கு பதிலா 2 எண்டு எழுதியிருக்கா. எனக்கு எல்லாமே இப்ப தானே புரியுது. நான் ஒரு பைத்தியக்காரன்..... பைத்தியக்காரன்...... "என்மேல எனக்கே கோபம் வருது. பேசாம செத்துடலாம் என்றுகூட தோணுச்சு.
ஐயோ.... ஐயோ.... ஐயோ என தலையிடித்தவாறே கத்தினன். ஹரியும் சீனுவும் என்ன கட்டிப்பிடிச்சிக்கிட்டாங்க.
காலங்கள் ஓடின...
காலத்தின் கோரநினைவுகளை எண்ணிப்பாத்துக்கிட்டு கண்ணோரம் வடிந்த கண்ணீரையும் துடச்சிக்கிட்டு அந்த பிஞ்சுக்கையை பிடிச்சபடி அந்த மலர்வளையத்த அக்கல்லறையில் வச்சேன். அந்தக்கை வேற யாருமில்ல. என் குட்டி மகளோடதுதான். அவ பேரு கூட ரம்யா தான். ஆமா எனக்கு இப்ப கல்யாணம் ஆகிடிச்சு. சந்தோஷமான life தான். ரம்யாவ என்னால மறக்கமுடியல தான். அதுக்காக அத்தோட என்னோட life முடிஞ்சு போயிரலயே. வாழ்க்கை என்றது ஒரு முடிவற்ற பந்தயம். கடைசி மூச்சு நிக்கும் மட்டும் ஓடிக்கிட்டே தான் இருக்கனும். இது தான் வாழ்க்கை எனக்கு கத்துக்கொடுத்த பாடம்.
கல்லறையைக்கைகாட்டி என் பொண்ணு கேட்டா "யாருப்பா இது?" "அவ ஒரு தேவதைமா..."
"தேவதைங்க எல்லாம் வானத்துல தானேப்பா இருக்காங்க?" "ஆமாம்மா இந்த தேவதையும் இப்ப வானத்துல தான் இருக்கா உன்ன பாத்துக்கிட்டே"  இப்படி என் மகளிடம் சொல்லிட்டு ஒரு கடதாசி எடுத்து அவள் கல்லறையில் ஒரு கடிதம் எழுதினேன்.
"நான் அன்று வராததற்கான தண்டனையாக இன்று வரை காத்துக்கொண்டிருக்கிறேன் உனக்காக...... அந்தப்பூங்காவில்...
அன்புடன் கௌதம்...

திகதி-2017.02.31"

A Story by Sasivan Siva
News Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *